WhatsApp_Image_2024_11_08_at_8_02_48_PM

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிப் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சரோஜா தேவி.

கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், வாழ்நாள் சாதனையாளர் போன்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

எம்.ஜி.ஆருடன் 26 படங்களிலும், சிவாஜி கணேஷனுடன் 22 படங்களிலும் நடித்திருக்கிறார். 

Actress Saroja Devi

1960- 70 காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த இவர்  உடல்நலக் குறைவால் இன்று காலமாகி இருக்கிறார்.

அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகை சிம்ரன் சரோஜா தேவி அவர்களின் மறைவிற்கு தனது எக்ஸ் தளப்பக்கத்தில் இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.

நடிகை சிம்ரன் வெளியிட்டிருக்கும் பதிவில், “ ஐகானிக் சரோஜா தேவி அம்மா இனி இல்லை.

இருப்பினும் இந்திய திரையுலகில் அவரது பாரம்பரியம் என்றென்றும் நிலைத்திருக்கும்.

‘ஒன்ஸ் மோர்’ படத்தில் அவருடன் திரையைப் பகிர்ந்து கொண்டது எனக்கு கிடைத்த பாக்கியம். எனது ஆழ்ந்த மரியாதையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று பதிவிட்டு தன்னுடைய இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest