ANI_20240218135043

தற்கொலை செய்துகொள்ளப்போவதாக ஜூலை 7ஆம் தேதி காலை, நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு காணாமல் போன 19 வயது தில்லி பல்கலைக்கழக மாணவி, யமுனை ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர், ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கருதப்படும் வடக்கு தில்லியில் உள்ள சிக்னேச்சர் பாலத்தில் மட்டும் சுமார் 60 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தும்கூட, சம்பவத்தன்று ஒன்று கேமராவும் வேலை செய்யவில்லை என்பதால், மாணவியின் குடும்பத்தினர் வேதனை அடைந்துள்ளனர்.

சிநேஹா தேவ்நாத் தந்தை, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியாக இருக்கும் நிலையில், தனது மகளின் மரணத்தில் இருக்கும் உண்மையைக் கண்டறிய உதவுமாறு சமூக வலைத்தளத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார். சம்பவம் நடந்தது ஒரு மாநிலம், இவர்கள் வாழ்வது ஒரு மாநிலம் என்பதால், வழக்குப் பதிவு செய்வதில் அலைக்கழிக்கப்படுவாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தில்லியில் உள்ள ஆத்ம ராம் சநாதன தர்மா கல்லூரியில் பயின்றுவந்த திரிபுராவைச் சேர்ந்த மாணவி சினேகா தேவ்நாத், தெற்கு தில்லியில் உள்ள பா்யவரன் வளாகத்தில் வசித்து வந்தார். இவர் ஜூலை 7 ஆம் தேதி காணாமல் போன நிலையில், ஜூலை 9ஆம் தேதி அவர் மாயமானது குறித்து முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சினேகா தேவ்நாத், யமுனை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிக்னேச்சர் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்யவிருப்பதாக தனது நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பிவிட்டு, காணாமல் போயிருக்கிறார்.

இதையடுத்து, காவல்துறை நடத்திய விசாரணையில், சினேகாவை கடைசியாக சிக்னேச்சர் பாலம் அருகே இறக்கிவிட்டதாக வாடகை கார் ஓட்டுநர் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆற்றில் அவரைத் தேடும் பணிகளும் நடைபெற்று வந்தன.

கடைசியாக சினேகாவைப் பார்த்தவர்கள், பாலத்தில் ஒரு பெண் நின்று கொண்டிருந்ததாகவும், பின்னா் அந்த இடத்திலிருந்து காணாமல் போனதாகவும் சிலா் தெரிவித்தனா்.

ஆற்றில், தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்) மற்றும் உள்ளூா் காவல்துறை உதவியுடன் தேடுதல் பணி நடைபெற்றதன் விளைவாக, ஞாயிற்றுக்கிழமை சினேகா சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest