Gv0vNIBaoAAP2sR

லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வரும் நிலையில், இங்கிலாந்து வெற்றி பெற ஒரேயொரு விக்கெட் மட்டுமே தேவைப்படுகிறது.

3-ஆவது டெஸ்ட்டில் கடைசி நாளான இன்று(ஜூலை 14) தேநீர் இடைவேளை வரை இந்தியா 163 ரன்களை 9 விகெட் இழப்புக்கு எடுத்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 30 ரன்கள் திரட்ட வேண்டும். கைவசம் இன்னும் ஒரேயொரு விக்கெட் மட்டுமே எஞ்சியுள்ளது.

இங்கிலாந்து பந்துவீச்சை தாக்குப்பிடித்து அணியை தனியொருவனாக கரைசேர்க்கப் போராடும் ஆல்-ரௌண்டர் ரவீந்திர ஜடேஜா அரைசதம் கடந்தார். அவர் 162 பந்துகளை சந்தித்து 56 ரன்கள் விளாசி களத்தில் உள்ளார். அவருடன் முகமது சிராஜ் பேட்டிங் செய்து வருகிறார்.

இங்கிலாந்து அணியில் இரண்டாவது இன்னிங்ஸில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ப்ரைடன் கார்ஸ் 2, க்றிஸ் வோக்ஸ் 1 விக்கெட் கைப்பற்றினர்.

ஸ்கோர் கார்டு:

முதல் இன்னிங்ஸில்

  • இங்கிலாந்து – 387/10

  • இந்தியா – 387/10

இரண்டாவது இன்னிங்ஸில்

  • இங்கிலாந்து – 192/10

  • இந்தியா – 163/9(தேநீர் இடைவேளை வரை)

England vs India, 3rd Test – Tea Break – India need 30 runs

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest