202507103448973

திருவனந்தபுரம்: கேரளத்தில் இஸ்லாமிய சமூகத்தில் செல்வாக்குமிக்க தலைவராக அறியப்படும் மூத்த தலைவர் காந்தபுரம் ஏ. பி. அபூபக்கர் மஸ்லியார், யேமனில் மரண தண்டனைக்கு ஆளாகியுள்ள செவிலியர் நிமிஷா பிரியாவை காப்பாற்றும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். அவர் யேமனில் உள்ள இஸ்லாமிய தலைவர்களை தொடர்புகொண்டு நிமிஷாவுக்கான தண்டனையை மாற்ற சமாதானப் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறார் என்று கேரள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யேமனில் நிமிஷா பிரியாவால் கொல்லப்பட்ட தலால் அப்தோ மஹ்தியின் குடும்பத்தினருடன் தொடர்பிலுள்ள யேமன் தலைவர்களுடன் கேரளத்தின் மஸ்லியார் பேச்சு நடத்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ள முடிவுகள் குறித்து செவிலியரின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் விதிக்கும் பணத்தை செலுத்தினால் தண்டனையிலிருந்து குற்றவாளி தப்பிக்க வாய்ப்புள்ளது. மேற்கண்ட விவரங்கள் நிமிஷாவின் குடும்பத்தினரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்று கேரள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், மஸ்லியார் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக இவ்விவகாரம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

செவிலியரை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற மத்திய அரசு தரப்பிலிருந்து எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடருவதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் பலனிக்காமல் பொனால், அதைத்தாண்டி வேறெந்த முயற்சிகளையும் அரசால் செய்ய இயலாத சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுவிட்டது.

ஜூலை 16-இல் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று யேமன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் 48 மணி நேரத்துக்கும் குறைவான கால அவகாசமே இருப்பதால், முஸ்லிம் தலைவர்கள் அளவிலான பேச்சு பலனளிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: யேமனில் மரண தண்டனை: செவிலியர் நிமிஷாவை காப்பாற்ற குடும்பத்தாரின் கடைசி முயற்சி!

A P Aboobacker Musliyar engages with Yemeni religious leaders as Nimisha Priya’s July 16 execution nears

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest