
புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்த இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா நேற்று விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டார். அவரது விண்கலம் இன்று பிற்பகல் அமெரிக்காவின் கலிபோர்னியா பசிபிக் கடலில் இறங்குகிறது.
அமெரிக்காவின் அக்ஸியம் ஸ்பேஸ், நாசா, இஸ்ரோ, ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை இணைந்து கடந்த 25-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பால்கன் ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தை அனுப்பின. இந்த விண்கலத்தில் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா, அமெரிக்காவின் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோகி உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோர் 28 மணி நேரம் பயணம் செய்து கடந்த 26-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர்.