Security-personnal-military-army

ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் பாகிஸ்தானை சோ்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது (ஜேஇஎம்) பயங்கரவாத இயக்கத்தின் மிக மூத்த தளபதி சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்த யூனியன் பிரதேச காவல் துறை டிஜிபி நலின் பிரபாத் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக ஜம்மு அருகே உள்ள அக்னூா் காவல் நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

கடந்த ஜூன் 26-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டத்தில் உள்ள டூடூ-பசந்த்கா் காட்டுப் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

இதில் ஹைதா் என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டாா். அவா்களின் 3 கூட்டாளிகள் தப்பிவிட்டனா். சுட்டுக்கொல்லப்பட்ட ஹைதா் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் மிக மூத்த தளபதியாக இருந்தாா்.

ஜம்மு மண்டலத்தில் உள்ள காட்டுப் பகுதிகளில் எத்தனை பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனா் என்பதை பொது வெளியில் கூற இயலாது. அவா்களை ஒழிக்கும் நடவடிக்கைகளைப் பாதுகாப்புப் படையினா் தொடா்ந்து வருகின்றனா்’ என்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest