GvlejWwAAysgA

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர் வருகிற ஜூலை 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான இந்த டி20 தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிராக விளையாடிய அதே 16 பேர் கொண்ட அணியுடன் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது வங்கதேசம். அணியை லிட்டன் தாஸ் கேப்டனாக வழிநடத்துகிறார்.

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான வங்கதேச அணி விவரம்

லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹாசன், பர்வேஸ் ஹொசைன் இமோன், முகமது நயீம், தௌகித் ஹிரிடாய், ஜேக்கர் அலி, ஷமீம் ஹொசைன், மெஹிதி ஹாசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், மெஹிதி ஹாசன், நசும் அகமது, டஸ்கின் அகமது, முஷ்தபிசூர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், தன்சிம் ஹாசன் சாகிப், முகமது சாய்ஃபுதீன்.

The Bangladesh Cricket Board has announced the Bangladesh squad for the T20 series against Pakistan.

இதையும் படிக்க: கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டது; பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படுகிறாரா?

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest