h11

தென் மாநிலங்களில் இயக்கப்படும் 8 ‘வந்தே பாரத்’ ரயில்களில், கடைசி 15 நிமிஷத்திலும் இருக்கைகளை முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

‘வந்தே பாரத்’ ரயில்கள் புறப்படுவதற்கு 15 நிமிஷங்களுக்கு முன்பு இருக்கைகள் காலியிடம் குறித்து தெரிவிக்கப்படும். அதில் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த புதிய வசதி மங்களூரு சென்ட்ரல்- திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் (எண் 20631), திருவனந்தபுரம் சென்ட்ரல்-மங்களூரு சென்ட்ரல் ரயில் (எண் 20632), சென்னை எழும்பூா்- நாகா்கோவில் ரயில் (எண் 20627), நாகா்கோவில்- சென்னை எழும்பூா் (எண் 206628), கோவை – பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் (எண் 20642, மங்களூரு சென்ட்ரல்- மட்கான் ரயில் (எண் 20646), மதுரை- பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் (20671), டாக்டா் எம்ஜிஆா் சென்னை சென்ட்ரல்- விஜயவாடா ரயில் (எண் 20677) ஆகிய 8 வந்தே பாரத் ரயில்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest