
மகாராஷ்டிரத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டால், பள்ளிகள் மூடப்படும் என்று ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார்.
மும்பைக்கு அருகிலுள்ள மீரா பயந்தரில் வெள்ளிக்கிழமை நடந்த பேரணியில் பேசிய அவர், மாநிலப் பள்ளிகளில் ஹிந்தி எப்படியாவது கற்பிக்கப்படும் என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சமீபத்தில் கூறியதைச் சுட்டிக்காட்டினார். தான் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை என்றும் ஆனால் திணிக்கப்படுவதை பொறுத்துக்கொள்ளமாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.
பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டால், தனது கட்சி பள்ளிகளை மூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையைப் பின்பற்றி, மகாராஷ்டிரத்தில் உள்ள மாநில அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை, மூன்றாவது மொழியாக ஹிந்தி கற்பிக்கப்படும் என்று மாநில அரசு அண்மையில் அடுத்தடுத்து இரண்டு உத்தரவுகளை வெளியிட்டது.
கத்தார் உதவியுடன்… 81 ஆப்கன் மக்களை வெளியேற்றிய ஜெர்மனி!
இது ஹிந்தி திணிப்பு என்று சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை கட்சியின் தலைவா் ராஜ் தாக்கரே உள்ளிட்டோா் குற்றஞ்சாட்டினா். கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து 3-ஆவது மொழியாக ஹிந்தியைக் கற்பிக்கும் அரசாணையை மாநில பாஜக கூட்டணி அரசு திரும்பப் பெற்றது.