
புதுதில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 78 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகங்களில் அதிக லாப வரம்புகளாலும் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் பங்குகளை விற்றதன் மூலம் ரூ.8,900 கோடி ஒரு முறை லாபம் ஈட்டியது.
எண்ணெய் முதல் தொலைத்தொடர்பு சேவை என பல்வேறு துறை வர்த்தகங்களில் கொடி கட்டி பறக்கும் முகேஷ் அம்பானி தலைமயிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஜூன் 2025 உடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.26,994 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், இதுவே அதன் முந்தைய ஆண்டு இதே காலத்தில் பதிவு செய்யப்பட்ட ரூ.15,138 கோடியிலிருந்து இந்த சாதனை அளவை எட்டியுள்ளது. மேலும், ஏசியன் பெயிண்ட்ஸில் பங்கு விற்பனையிலிருந்து லாபத்தைத் தவிர்த்து, மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 20 சதவிகிதம் அதிகமாகும்.
நிறுவனத்தின் லாபம் ஆய்வாளர்களின் மதிப்பீடுகளை விட கணிசமாக அதிகமாகும். வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன் தள்ளுபடிக்கு முந்தைய அதன் அதிகபட்ச ஒருங்கிணைந்த காலாண்டு வருவாயையும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடன்தொகை நீக்கத்திற்கு முந்தைய வருவாய் (EBITDA) 35.7 சதவிகிதம் உயர்ந்து ரூ.58,024 கோடியாக உள்ளது.
உலகளாவிய குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடன்தொகை நீக்கத்திற்கு முந்தைய வருவாய் ஒரு வருடத்திற்கு முந்தைய காலத்தை விட வலுவாக மேம்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: விப்ரோ: முதல் காலாண்டு வருவாய் 3% அதிகரிப்பு!