tvs

யாகடந்த ஆண்டு ஜூன் மாதம் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட ‘தி வெல்வெட் சண்டவுன்’ என்ற இசை குழு ஸ்பாடிஃபையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

60-களில் பிரபலமாக இருந்த இசைக் குழுக்களின் பாணியில், ப்ளூஸ்-ராக் இணைந்த மிருதுவான ராக் பாடல்களை அந்த குழு இறக்கியது. குழுவுக்கென புகைப்படம் கிடையாது, நேர்காணல்கள் கிடையாது, பின்கதையும் பிரபலப்படுத்துவதற்கான எந்த முயற்சியும் கிடையாது.

ஒரே மாதத்தில் மூன்று ஆல்பம்களை வெளியிட்டு, ஸ்பாடிஃபையில் 1.5 மில்லியன் மாதாந்திர ரசிகர்களைப் பெற்றனர். அவர்களது ‘டஸ்ட் ஆன் தி வைல்ட்’ என்ற பாடல் 2 மில்லியன் முறை கேட்கப்பட்டிருக்கிறது. இத கிட்டார் வாத்தியம் தி அனிமல்ஸ் என்ற இசைக்குழு 1964-ல் வெளியிட்ட “ஹவுஸ் ஆஃப் தி ரைசிங் சன்” பாடலை ஒத்திருப்பதாகப் பலரும் தெரிவித்தனர்.

இவர்களின் மற்ற பாடல்களும் விண்டெஜ் இசையின் மறு பிரதியாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூலை 2ம் தேதி தி வெல்வெட் சண்டவுன் இசைக்குழுவின் பிரதிநிதியாக ஆண்ட்ரூ ஃப்ரீலான் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் இந்தக் குழுவின் பாடல்கள் முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவால் எழுதி உருவாக்கப்பட்டவை என்பதைக் கூறினார்.

இதற்காக சுனோ என்ற செயற்கை நுண்ணறிவின் பர்சோனா என்ற அம்சத்தைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் ஆதிகாலம்தொட்டு பரிசோதனை முயற்சிகளில் இருக்கும் ஒன்று இசைதான். இந்த புதிய பரிசோதனை முயற்சி இசையின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. நமது வேலைகளை எளிதாக்கும் எனக் கூறப்பட்ட செயற்கை நுண்ணறிவு, அவற்றை எடுத்துக்கொள்வதும், இப்போது கலைகளை அபகரிப்பதும் பெரும் கேள்விகளை உருவாக்கியிருக்கிறது.

“மனித படைப்பு வழிகாட்டுதலில் செயல்படும் செயற்கை இசைத் திட்டம்’ என தன்னை அறிமுகப்படுத்துகிறது ‘தி வெல்வெட் சண்டவுன்’. இதற்கு முன்னரான செயற்கை நுண்ணறிவுகள் லோ-ஃபை அல்லது எலக்ட்ரானிக் இசைகளை மட்டுமே அமைத்துள்ளன.

தி வெல்வெட் சண்டவுன், அப்படியே 60-களின் இசைக் குழுக்களை நகலெடுத்து, டிஜிட்டல் உருவாக்கத்துக்கும், நம்பகத்தன்மையான இசைக்குழுவுக்கும் இடையிலான கோட்டை மங்கச்செய்துள்ளது.

ஏற்கெனவே நீண்ட நாள்களுக்கு கேட்பவர்களை நம்பச் செய்துள்ளதால் இதை யாரும் மறுக்க முடியாது. இதைப் போன்ற பல இசைப் பக்கங்கள் ஸ்பாடிஃபை போன்ற தளங்களில் ஊடுருவியுள்ளன.

சில நாள்களுக்கு முன்னர் ஹிப்ஹாப் தமிழா ஆதி கட்சிகள் மட்டும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட ஒரு பாடலை வெளியிட்டார். வீடியோ மட்டுமல்லாமல் இசையையும் எளிமையாக கையில் தருகிறது AI.

சுனோ, உடியோ மற்றும் முபெர்ட் போன்ற இசையை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவுத் தளங்கள், இசை பற்றி எதுவும் தெரியாதவர்கள் கூட ஒரு பாடலை உருவாக்க முடியுமளவு வழிவகைச் செய்கிறது. இவற்றை எளிமையாக அணுகவும் முடியாது.

அல்காரிதம் கேமிங் மற்றும் போலி கலைஞர்களைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதனால் ஸ்பாடிஃபை கடந்த ஆண்டில் மட்டுமே ஆயிரக்கணக்கான AI உருவாக்கிய பாடல்களை நீக்கியுள்ளது.

கோல்ட்மேன் சாக்ஸின் கூற்றுப்படி, 2030 ஆம் ஆண்டில் 30% க்கும் மேற்பட்ட புதிய இசை AI- உதவியுடன் உருவாக்கப்படலாம், இது பல முக்கிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு பாடல்களை உருவாக்க ஏற்கெனவே இருக்கும் பாடல்களையே முன்னோடியாக எடுத்துக்கொள்வது. பாடல்கள் உருவாக்கம் என்ற வணிகம் (முழுவதுமாக இல்லாவிட்டாலும்) செயற்கை நுண்ணறிவின் கைகளுக்குச் சென்றால் இசையில் புதுமை என்பதே போய்விடும் கவலை உள்ளது.

இதுபோன்ற செயற்கை நுண்ணறிவு பாடல்கள் விரைவில் தமிழிலும் உருவாக்கப்படலாம்.

செயற்கை நுண்ணறிவை விட அசல் கலைஞர்களின் இசையை நீங்கள் விரும்புவீர்களா, அல்லது எங்கிருந்து வந்தாலும் இசைதானே எனக் கேட்பீர்களா? உங்கள் கருத்தை கமண்டில் தெரிவியுங்கள்!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest