d614a3ce-8a1a-4231-a837-e70eddbddc2b

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பட்டவர்த்தி பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ரூத். இவர், ஆக்டிங் டிரைவர் ஆக வேலை பார்த்து வருகிறார்  இவருக்கும் ஸ்ருதி (வயது: 27) என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று கணவன் மனைவி இருவருக்கும் குடும்பத்தகராறில் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஸ்ருதியை தாக்கியுள்ளார்.

இதனை அடுத்து அவரை நேற்று நள்ளிரவு குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று அதிகாலை அரசு மருத்துவமனை புதிய கட்டடத்தின் முதல் தளத்தில் குளுக்கோஸ் ஏற்றிய நிலையில் மயக்கத்தில் இருந்தவரை விஷ்ரூத் கத்தியால் மூன்று இடங்களில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில், ஸ்ருதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

sruthi

இது குறித்து, தகவல் அறிந்த குளித்தலை டி.எஸ்.பி செந்தில்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், தப்பி ஓடிய விஷ்ரூத்தை குளித்தலை காவல் நிலைய போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த விஷ்ரூத்  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கருப்பு பூனை படையில் டி.எஸ்.பி-யாக வேலை பார்த்து பணி ஓய்வு பெற்ற  ராமசாமி என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 

குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடந்த இந்த கொலை சம்பவம் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest