Rain-night-edi

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

அடுத்த 3 மணிநேரத்துக்கு கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் மோதி விபத்து: 3 பேர் பலி

Chance of rain in Chennai and 19 districts at night

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest