
தில்லியில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேரிவால் சந்தித்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சஞ்சய் சிங்கும் உடன் சென்றார். இருப்பினும் இந்த சந்திப்பு குறித்து முழு விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம்! எங்கே? எப்போது?
பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூலை 21) தொடங்கவுள்ளது.
இந்த சூழலில் ஜகதீப் தன்கர் – கேஜரிவால் சந்திப்பு நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.