
மகாராஷ்டிரத்தில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விமானியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகேவுள்ள மிரா சாலையில் வசித்து வரும் தனியார் விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானி உடன் பணியாற்றிய விமான பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் நவ்கார் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காவல் துறையினர் அளித்த தகவலின்படி, தனியார் விமான நிறுவனத்தில் பணிபுரியும் 23 வயது விமானப் பணிப் பெண், பணிநிமித்தமாக விமானியுடன் லண்டன் சென்றுள்ளார். லண்டன் சென்று திரும்பி வந்ததும் இருவரும் தங்கள் வீடுகளுக்கு ஒன்றாகவே சென்றுள்ளனர்.
மிரா சாலையில், வழியில் இருக்கும் தனது வீட்டிற்கு வருமாறு விமானி அழைப்பு விடுத்துள்ளார். அங்குச் சென்று பார்த்த பிறகுதான் வீட்டில் யரும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அங்கு விமானப் பணிப்பெண்ணை, விமானி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
விமான பணிப்பெண் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விமானி தலைமறைவாகியுள்ளதால், அவரைத் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
உடன் பணிபுரிந்த சக ஊழியரை விமானி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், விமானத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | சொல்லப் போனால்… ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!