
உ.பி.யில் அம்பேத்கர் சிலையை பெயர்த்து கால்வாயில் வீசிய மர்மநபர்களால் பரபரப்பு நிலவியது.
உத்தரப் பிரதேச மாநிலம், கங்காநகரில் உள்ள கோடாபூர் கிராமத்தில் பி.ஆர். அம்பேத்கரின் சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்த சிலையை மர்மநபர்கள் யாரோ வேரோடு பெயர்த்து கால்வாயில் வீசியுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் ஒருவிதமான பதற்றம் நிலவியது. தகவல் கிடைத்ததும் போலீஸார் நிகழ்விடத்துக்கு விரைந்தனர்.
இதுகுறித்து கங்காநகர் துணை காவல் ஆணையர் குல்தீப் சிங் குணவத் கூறுகையில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலையை அகற்றி அருகிலுள்ள கால்வாயில் வீசினர். இந்தச் சிலை உள்ளூர்வாசிகளிடையே சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தது.
12 கவுன்சிலர்களுக்கு எதிராக நகராட்சித் தலைவர் வழக்கு: நீலகிரி ஆட்சியருக்கு உத்தரவு
வழக்கு பதிவு செய்யப்பட்டு, விரைவில் அம்பேத்கரின் புதிய சிலை நிறுவப்படும்.
மேலும் அப்பகுதியில் நிலைமை அமைதியாகவும் கட்டுப்பாட்டிலும் உள்ளது என்றார். இதனிடையே சிலை விவசாய நிலத்திற்கு செல்லும் பிரச்னைக்குரிய நுழைவு பாதையில் அமைந்திருந்ததாகக் வருவாய்த் துறையினர் தரப்பில் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.