
லண்டன்: இந்திய பிரதமர் நரேந்திர மோடி – இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் முன்னிலையில், இந்தியா – இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதற்கான ஒப்பந்தத்தில், இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலும், பிரிட்டன் வர்த்தக அமைச்சர் ஜோனாதன் ரெனால்ட்ஸும் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியா – இங்கிலாந்து பொருளாதார ஒத்துழைப்பில் இன்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (CETA) இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.