tvl20snk_2110chn_6

பிகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள மோஹாச்சி பங்கத்வா கிராமத்தில் ஒரு வயது குழந்தை கடித்ததால், நாகப் பாம்பு உயிரிழந்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவம் நடந்தவுடன், மயக்கமடைந்த குழந்தையை உடனடியாக கிராமத்துக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு குடும்பத்தினா் கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக பெட்டியா நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது.

குழந்தையை மருத்துவா்கள் கண்காணித்து வருவதாகவும், ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் சிகிச்சை உடனடியாகத் தொடங்கப்படும் என்றம் மருத்துவமனை கண்காணிப்பாளா் துவகாந்த் மிஸ்ரா கூறினாா்.

குடும்பத்தினரின் கூற்றுப்படி, வீட்டுக்குள் நுழைந்த பாம்பை, விபரீதம் அறியாத குழந்தை கையில் பிடித்து, கடித்துள்ளது. இதில் பாம்பு உயிரிழந்த நிலையில், குழந்தையும் மயக்கமடைந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் ஆச்சரித்தையும், அதிா்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest