
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இங்கிலாந்தைக் காட்டிலும் 311 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி கடைசி நாள் ஆட்டத்தில் விளையாடி வருகிறது.
இரண்டாவது இன்னிங்ஸில் 0 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தபோதிலும், கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். கே.எல்.ராகுல் 90 ரன்களில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ஷுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். அவர் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அசத்தல்
கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் ஆட்டமிழந்த பிறகு, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் ஜோடி சேர்ந்தனர்.
இந்த இணை விக்கெட்டினை இழக்காமல் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் அரைசதம் கடந்து விளையாடி வருகின்றனர்.
ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 50 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்றுள்ளது. ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் தலா 70 ரன்களுக்கும் அதிமாக எடுத்து விளையாடி வருகின்றனர்.
போட்டியின் கடைசி நாளான இன்று, 20 ஓவர்கள் மட்டுமே மீதமிருப்பதால் இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி டிராவை நோக்கியே நகர்ந்து வருகிறது.
இதையும் படிக்க: 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வீரரின் சதம்; ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்த ஷுப்மன் கில்!
The fourth Test match between India and England is moving towards a draw.