maan-ki-baat

இன்றைய தலைமுறையினருக்கு தமிழ் ஓலைச்சுவடிகளைப் படிக்க கற்றுக் கொடுத்து வரும் தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சோ்ந்த மணிமாறன் மற்றும் பிகார் மாநிலம் சிலாவ் பகுதியை சேர்ந்த நெசவாளர் நவீன் குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமா் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறாா். 124-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) ஒலிபரப்பானது.

அதில், ஓலைச்சுவடிகள் மரபை ஊக்கமளிக்கும் ஆளுமைகளில் ஒருவரான தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சோ்ந்த மணிமாறன், இன்றைய தலைமுறையினருக்கு தமிழ் ஓலைச்சுவடிகளைப் படிக்க கற்றுக் கொடுத்து வருகிறாா். அவரது மாலைநேர வகுப்புகளில் மாணவா்கள், பணிபுரியும் இளைஞா்கள், ஆய்வாளா்கள் என பலரும் கற்கத் தொடங்கினா். தமிழ்ச் சுவடிகளை எவ்வாறு படிப்பது, புரிந்துகொள்வது என்பது குறித்து அவரிடம் கற்றுத் தோ்ந்துள்ளனா். சிலா், இந்தச் சுவடிகளின் அடிப்படையில் பாரம்பரிய மருத்துவ முறை மீதான ஆய்வுகளையும் தொடங்கியுள்ளனா். இதுபோன்ற முயற்சிகள், நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாா்.

நெசவாளர் நவீன் குமார்

பிகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள சிலாவ் பகுதியைச் சேர்ந்த நெசவாளர் நவீன் குமாரை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.

நெசவு மற்றும் கைத்தறி தனது மூதாதையர் தொழில் என்றும், கூட்டுறவு குழு அமைக்கப்பட்ட பிறகு 261 நெசவாளர்களும் தொழிலாளர்களும் இணைந்து தன்னிறைவு பெற்றுள்ளனர் . சிலாவ் பகுதியைச் சேர்ந்த குழு பிரபலமான பவான் கொள்ளை புடவைகளையும் வடிவமைத்து பட்டு நூலை உற்பத்தி செய்கிறது.

தங்கள் விளைபொருட்களின் சந்தைப்படுத்தல் மற்றும் சரியான விலை நிர்ணயம் இன்னும் ஒரு பிரச்னையாகவே உள்ளது என்றும் குமார் கூறினார். தனது குழுவின் நெசவாளர்களுக்கு உதவியதற்காக மத்திய ஜவுளி அமைச்சகத்திற்கும் அவர் நன்றி தெரிவித்தார். நேபுரா பட்டு முதன்மை நெசவாளர் கூட்டுறவு குழு உறுப்பினர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்றார்.

சூடான இட்லியை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்! ஹார்வர்ட் மருத்துவர் சொன்ன தகவல்

Prime Minister praises Thanjavur Manimaran, Naveen Kumar

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest