
71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2023ம் ஆண்டு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 71வது தேசிய திரைப்பட விருதுகளின் அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கின்றது.
இதில் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை ‘பார்க்கிங்’ திரைப்படம் வென்றிருக்கிறது. சிறந்த திரைக்கான விருதையும் பெற்றிருக்கிறது. எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பெற்றிருக்கிறார்.
‘வாத்தி’ பட பாலுக்காக சிறந்த இசையப்பாளர் விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்.

சிறந்த படமாக ’12th Fail’ தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
சிறந்த நடிகர்களாக ஷாருக்கான் (Jawan), விக்ராந்த் மெஸ்ஸி (12th Fail) தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். சிறந்தை நடிகையாக Rani Mukerji (Mrs. Chatterjee vs Norway) தேர்வாகியிருக்கிறார்.
சிறந்த மலையாள திரைப்படமாக ‘ullozhukku’ தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்திற்காக நடிகை ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த இயக்குநராக Sudipto sen (Kerala story) தேர்வாகியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…