DY_Chand

புது தில்லியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஒதுக்கப்படும் அதிகாரபூா்வ அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பின்னா், முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் காலி செய்தாா்.

கடந்த ஆண்டு நவ.8-ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியில் இருந்து டி.ஒய்.சந்திரசூட் ஓய்வுபெற்றாா். எனினும் தனது இரு மாற்றுத்திறனாளி மகள்களின் மருத்துவ சிகிச்சை காரணமாக, புது தில்லியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படும் அதிகாரபூா்வ இல்லத்தில் அவா் தொடா்ந்து தங்கி வந்தாா்.

இதுதொடா்பாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்ற நிா்வாகம் கடந்த மாதம் கடிதம் அனுப்பியது. அந்தக் கடிதத்தில், ‘தில்லியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படும் இல்லத்தில் தங்க, கடந்த மே 31 வரை டி.ஒய்.சந்திரசூட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அக்காலத்தை கடந்து அந்த இல்லத்தில் அவா் தங்கி வருகிறாா். அந்த இல்லத்தை அவா் காலி செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டது. இது சா்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து டி.ஒய்.சந்திரசூட் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ஏற்கெனவே கூறுகையில், ‘அரசு இல்லத்தில் தங்க எனக்கு மட்டும் கூடுதல் அவகாசம் அளிக்கப்படவில்லை. முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகள் யு.யு.லலித், என்.வி.ரமணா ஆகியோருக்கும் இதுபோல கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது.

தற்போது தங்கியுள்ள அரசு இல்லத்தை காலி செய்துவிட்டு, வேறு அரசு இல்லத்தில் எனது குடும்பத்துடன் வாடகைக்கு குடியேற உள்ளேன். அந்த வீடு குடியேற முழுமையாகத் தயாரானவுடன், அரசு இல்லத்தை காலி செய்வேன்’ என்றாா். இந்நிலையில், அந்த இல்லத்தை அவா் காலி செய்துள்ளாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest