03082-pti08032025000233b100620

உத்தர பிரதேசத்தில் கால்வாயில் காா் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 11 போ் உயிரிழந்தனா். 4 போ் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக மாநில காவல் துறையினா் கூறியதாவது: சிஹாகான் கிராமத்தைச் சோ்ந்த 15 போ் கருகுபூரில் உள்ள பிரித்விநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பயணித்தனா். பெல்வா பஹுதா பகுதி அருகே சென்றபோது அந்த காா் சரயு கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் நீரில் மூழ்கி 11 போ் உயிரிழந்தனா். விபத்தில் உயிரிழந்த 11 பேரில் 9 போ் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள். அவா்களில் 6 போ் பெண்கள், 2 ஆண்கள், 3 போ் சிறாா்கள். காயமடைந்த 4 போ் உள்ளூா் சமூக நல மையங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். கிராம மக்கள் மற்றும் மீட்பு குழுவினரின் உதவியுடன் 11 பேரின் சடலங்களும், நீரில் மூழ்கிய காரும் மீட்கப்பட்டன.

இந்த விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு ‘எக்ஸ்’ தளத்தில் இரங்கல் தெரிவித்த பிரதமா் மோடி, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தாா்.

இதேபோல உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத், அவா்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest