mp-sudha

தில்லியில் நடைபயிற்சியின்போது மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி.சுதாவின் தங்கச் செயினை மர்மநபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி.சுதா அதில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து அவர் காலையில் நடைபயிற்சி சென்றிருக்கிறார்.

அப்போது ஹெல்மெட்டுடன் ஸ்கூட்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர் சுதாவின் 4.5 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றுள்ளார்.

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

இச்சம்பவத்தின்போது எம்.பி. சுதாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் இதுதொடர்பாக சாணக்கியபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்த அவர், உள்துறை அமைச்சரிடம் கடிதமும் அளித்துள்ளார்.

தில்லியில் உயர் பாதுகாப்பு மண்டலமாக விளங்கும் பகுதியில் சுதா எம்.பியிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mayiladuthurai Congress MP Sudha’s gold chain was snatched by unidentified persons while she was out for a walk in Delhi.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest