
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் ‘இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதலை நான் தான் நிறுத்தினேன்’ என்று கூறி வருகிறார்.
இதை ஆரம்பத்தில் இருந்தே மறுத்து வருகிறது இந்திய அரசு.
தற்போது நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதில் கூட, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் இந்தக் கூற்றை மறுத்தனர். ஆனால், தற்போது, மீண்டும் ட்ரம்ப் ‘நான் தான்’ இந்தியா – பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்தினேன் என்று கூறியிருக்கிறார்.

நேற்று
நேற்று, ட்ரம்ப் ஒரு ரேடியோ நேர்காணலில், ‘நான் ஐந்து போர்களை நிறுத்தியிர்க்கிறேன். அதில் 31 ஆண்டுகளாக காங்கோ மற்றும் ரூவாண்டா இடையே நடந்து கொண்டிருந்த போரும் ஒன்று. அந்தப் போரில் அதுவரை 7 லட்சம் மக்கள் இறந்திருந்தினர்.
ஆனால், அந்தப் போர் முடிவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆனால், அதை நான் நிறுத்தி வைத்தேன்” என்று கூறியிருக்கிறார்.
இதில் அவர் குறிப்பிட்டிருக்கும் ஐந்து போர்களில் இந்தியா – பாகிஸ்தான் தாக்குதலும் ஒன்று.
நேற்று முன்தினம்…
நேற்று முன் தினமும், இந்தியா – பாகிஸ்தான் இடையே நடக்க இருந்த அணு ஆயுதப் போரை நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

நோபல் பரிசு!
கடந்த வாரம், வெள்ளை மாளிகையில் செய்தி செயலாளர் கரோலின் லீவிட், “ட்ரம்ப் தனது ஆறு மாத ஆட்சிக்காலத்தில், மாதத்திற்கு ஒன்று என போர் நிறுத்தத்தையும், அமைதிக்கான ஒப்பந்தத்தையும் மேற்கொண்டுள்ளார்.
அதனால், அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
ஆக, ட்ரம்ப் திரும்ப திரும்ப இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் பற்றி கூறிவருவதற்கு நோபல் பரிசும் ஒரு காரணம்.