
இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலும், அவர் கணவரும் பிரியும் முடிவை கைவிட்டுள்ளனர்.
தனது கணவர் பருபள்ளி காஷ்யப்புடனான புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள சாய்னா நேவால், சில நேரங்களில் தூரம் என்பது ஒருவர் நம் வாழ்வில் இருப்பதன் மதிப்பை புரிய வைக்கிறது. மீண்டும் எங்கள் உறவை, இணைக்க முயற்சிக்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய பாட்மிண்டன் வீரர்களான சாய்னா நேவால் மற்றும் பாருபள்ளி காஷ்யப், கடந்த 2018 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். ஹைதராபாத்தில் உள்ள கோபிசந்த் பயிற்சி மையத்தில் 2005 ஆம் ஆண்டு முதல் இருவரும் ஒன்றாகப் பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.
2012 ஒலிம்பிக் போட்டியில் இருவரும் கலந்துகொண்ட நிலையில், நட்பு காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அண்மையில் சாய்னா அறிவித்தார்.
இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை
ஆனால் சாய்னா நேவாலின் பிரிவு குறித்த கருத்துக்கு பாருபள்ளி காஷ்யப் எந்தப் பதிலும் அளிக்காமல் அமைதி காத்து வந்தார். இந்த நிலையில் சாய்னா நேவாலும், அவர் கணவரும் பிரியும் முடிவை கைவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.