399473

இந்திய கிரிக்கெட் வீரரான சாஹல் சமீபத்தில் கலந்துகொண்ட பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய கிரிக்கெட் வாழ்கை, மனைவியுடனான விவாகரத்து, மன அழுத்தம் என பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா மனைவியின் கருத்து குறித்து சஹால் பேசியிருக்கிறார். அதாவது சில வருடங்களுக்கு முன்பு ஹர்பஜன் சிங்கின் மனைவி கீதா பஸ்ராவின் “Who’s The Boss?” (ஹூ இஸ் தி பாஸ்?) என்ற நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா மற்றும் அவரது மனைவி ரித்திகா சஜ்தே கலந்துகொண்தடிருந்தனர்.

ரோஹித் சர்மா- ரித்திகா சஜ்தே
ரோஹித் சர்மா- ரித்திகா சஜ்தே

அப்போது, சாஹலை ஒரே வார்த்தையில் விவரியுங்கள் என்று கேட்டப்போது ரோஹித் சர்மா விழுந்து விழுந்து சிரிக்க, ரித்திகா சற்றும் யோசிக்காமல், சாஹலை ஒரு ‘கார்ட்டூன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இதைக் கேட்டு நிகழ்ச்சியில் இருந்த ஹர்பஜன் சிங் மற்றும் கீதா பஸ்ராவும் சிரித்தனர். அத்துடன் நிறுத்திக்கொள்ளாத ரித்திகா, “அவன் எப்போதுமே ஒரு கார்ட்டூன் மாதிரிதான்” என்றும் கூறினார்.

இது குறித்து பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் சஹாலிடம் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த சஹால், “நான் எல்லோரிடமும் சிரித்த முகத்துடன், மரியாதையாகப் பழகுவேன். ஜாலியாகப் பேசுவேன். அதனால், சிலர் என்னைச் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். ‘இவனிடம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், இவன் எதுவும் சொல்ல மாட்டான்’ என்று நினைக்கிறார்கள்.

 சாஹல்
சாஹல்

எளிதில் வருத்தப்படும் குணம் என்னுடையது அல்ல. ஆனால், மக்கள் என்னை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு விட்டார்கள். நான் விரும்பியபடி என் வாழ்க்கையை வாழ்கிறேன். ஆனால், சில சமயங்களில் சில விஷயங்கள் மனதை கடுமையாகத் தாக்கி, காயப்படுத்துகின்றன” என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest