Aditya-Birla-Capital

புதுதில்லி: ஆதித்யா பிர்லா கேபிடல் லிமிடெட் நிறுவனம் 2025 ஜூன் உடன் முடிவடைந்த முதல் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த லாபம் 10 சதவிகிதம் உயர்ந்து ரூ.835 கோடியாக உள்ளது என்றுது.

இதுவே ஒரு வருடத்திற்கு முன்பு அதே காலகட்டத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.759 கோடியாக இருந்தது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மொத்த வருமானம் ரூ.9,531 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.8,719 கோடியாக இருந்தது.

மொத்த செலவுகளும் காலாண்டில் ரூ.8,460 கோடியாக அதிகரித்துள்ளது. இதுவே நிதியாண்டு 2025ல் ரூ.7,756 கோடியாக இருந்தது.

நிறுவனமானது வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வணிகம், வீட்டுவசதி நிதி, சொத்து மேலாண்மை, ஆயுள் மற்றும் பொது காப்பீடு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ளது.

இதையும் படிக்க: பயணிகள் போக்குவரத்து வளர்ச்சி சீராக உள்ளதாக மும்பை விமான நிலையம் பதிவு!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest