
இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.
இப்போட்டியில் சிராஜ் 9 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 8 விக்கெட்டுகளும் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.
இப்போட்டியின் வெற்றியின் மூலம் இந்திய அணி 2 – 2 என தொடரை சமன் செய்திருக்கிறது.
ஆட்ட நாயகன் விருதை சிராஜ் வென்றார்.

அணிக்காக அனைத்தையும் செய்வேன்
வெற்றிக்கு பின்னர் பேசிய சிராஜ், “சரியான இடத்தில் பந்து வீச வேண்டும் என்றுதான் நான் யோசித்துக் கொண்டிருந்தேன். உண்மையைச் சொன்னால், ப்ரூக் கேட்சை பிடித்தபோது பவுண்டரி லைனில் கால் வைப்பேன் என்று நான் நினைக்கவில்லை. அதுதான் போட்டியை மாற்றக்கூடிய தருணம். எப்போதும் என்மீது நான் நம்பிக்கை வைத்திருப்பேன், அணிக்காக அனைத்தையும் செய்வேன்” என்று கூறினார்.

இந்தத் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் சுப்மன் கில் 754 ரங்களுடன் முதலிடத்திலும், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 23 விக்கெட்டுகளுடன் சிராஜ் முதலிடத்திலும் இருக்கின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…