
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், முகமது சிராஜை `உண்மையான போராளி’ என்று பாராட்டி பேசியிருக்கிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி பரபரப்பாக முடிந்திருக்கும் நிலையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை பாராட்டி இருக்கிறார்.

போர் வீரரைப் போன்றவர்
“முகமது சிராஜ் போர் வீரரைப் போன்றவர். அவரைப் போன்ற வீரர் நமது அணியிலும் இருக்க வேண்டும் என நம்மை நினைக்க வைப்பவர். இந்திய அணிக்காக தனது ஒட்டுமொத்த சக்தியையும் கொடுத்து விளையாடுகிறார்.
சில சமயங்களில் போலியான கோவத்தை வெளிப்படுத்துவார். ஆனால், அதைப் பார்க்கும்போதே போலி என நமக்குத் தெரிந்துவிடும். உண்மையிலேயே அவர் நல்ல மனிதர்.

மிகவும் திறமை வாய்ந்த வீரர். அவருக்கு எதிராக விளையாடுவதை நான் மிகவும் விரும்புவேன்” என்று ஜோ ரூட் சிராஜை பாராட்டி இருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…