
இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் சிராஜ் 9 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 8 விக்கெட்டுகளும் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.
இப்போட்டியின் வெற்றியின் மூலம் இந்திய அணி 2 – 2 என தொடரை சமன் செய்திருக்கிறது.
ஆட்ட நாயகன் விருதை சிராஜ் வென்றார். இத்தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 23 விக்கெட்டுகளுடன் இவரே முதலிடத்தில் இருக்கிறார்.

அதேபோல், இரண்டு அணிகளின் தலைமைப் பயிற்சியாளர்கள் எதிரெதிர் அணியிலிருந்து தலா ஒருவரை தொடர் நாயகனாகத் தேர்வு செய்தனர்.
அதன்படி, இத்தொடரில் 754 ரன்கள் அடித்த இந்திய கேப்டன் சுப்மன் கில்லை பிரெண்டன் மெக்கலம்மும், 481 ரன்கள் அடித்த இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கை கவுதம் கம்பீரும் தொடர் நாயகர்களாகத் தேர்வு செய்தனர்.
தொடர்நாயகன் விருது வென்ற பின்னர் பேசிய சுப்மன் கில், “இரண்டு அணிகளும் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது.
போட்டியின் கடைசி நாள்களில் இரண்டு அணிகளும் முடிவு என்னவென்று தெரியாமல் களமிறங்கின.
சிராஜ், பிரசித் போன்ற பவுலர்கள் உங்களிடம் இருக்கும்போது கேப்டன்சி எளிதாகத் தெரிகிறது.

இன்று நாங்கள் எதிர்வினையாற்றிய விதம் அற்புதமாக இருந்தது. நாங்கள் உறுதியுடன் இருந்தோம்.
கேப்டனின் கனவு வீரர் சிராஜ். ஒவ்வொரு பந்திலும், ஒவ்வொரு ஓவரிலும் தன்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்தார்.

2 – 2 என்பது நியாயமான பிரதிபலிப்புதான். இரு அணிகளும் எப்படி விளையாடியது என்பதை இது வெளிப்படுத்துகிறது.
இந்தத் தொடரில் சிறந்த பேட்டராக இருப்பதே எனது நோக்கமாக இருந்தது. இப்போது திருப்தியாக இருக்கிறது.
இந்த ஆறு வரங்களிலிருந்து கற்றுக்கொண்டது, `இறுதிவரைப் போராட வேண்டும்’ என்பதுதான்.” என்று கூறினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…