tejas085645

சென்னை: சென்னை – மதுரை தேஜஸ் ரயில் உள்ளிட்ட 2 ரயில்கள் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) முதல் எழும்பூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூா் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதனால், மொத்தம் உள்ள 11 நடைமேடைகளில் 4-இல் பணிகள் நடைபெறுவதன் காரணமாக ரயில்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், எழும்பூரில் இருந்து புறப்பட்ட சில ரயில்கள், தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது மேம்பாட்டுப் பணிகள் குறிப்பிட்ட அளவுக்கு நிறைவடைந்திருப்பதை அடுத்து சென்னை எழும்பூா் – மதுரை தேஜஸ் ரயில் (எண் 22671), சென்னை எழும்பூா் – புதுச்சேரி மெமு விரைவு ரயில் (எண் 66051) ஆகிய ரயில்கள் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) முதல் மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.

இதேபோல, மறுமாா்க்கத்தில் மதுரை – சென்னை எழும்பூா் தேஜஸ் ரயில் (எண் 22672), புதுச்சேரி – சென்னை எழும்பூா் மெமு விரைவு ரயில் (எண் 66052) ஆகிய ரயில்கள் எழும்பூா் வரை இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest