moida

பாஜக ஆளும் மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் குற்றம் சாட்டப்பவர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் கட்டடங்களை புல்டோசரை வைத்து இடித்து தரைமட்டமாக்கப்படுவது, தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. இருப்பினும், புல்டோசர் நடவடிக்கைகள் குறைந்தபாடில்லை.

உத்தரப் பிரதேசத்தில்தான் அதிகளவில் புல்டோசர் நடவடிக்கைகள் நடப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான நடவடிக்கை என்றுகூறி, கடந்த 2 மாதங்களில் 130 அங்கீகரிக்கப்படாத கட்டடங்களை அம்மாநில அரசு இடித்ததுடன், 190-க்கு சீல் வைத்துள்ளது.

அதுமட்டுமின்றி, அவற்றில் பெரும்பாலும் இஸ்லாமியர்களின் கட்டடங்களாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அரசு மற்றும் தனியார் நிலங்களில் கட்டப்பட்ட இஸ்லாமியர்களின் கல்விச் சாலை, தொழுகைத் திடல், தர்கா மீது புல்டோசர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது ஒருசாரார் மீதான பாகுபாடு நடவடிக்கை என்ற சந்தேகத்தை எழுப்புவதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest