TNIEimport2023723originalCitizenship

2024 ஆம் ஆண்டில், சுமார் 2 லட்சம் இந்தியர்கள் தங்களது இந்தியக் குடியுரிமையைத் துறந்துள்ளதாக, மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில், குடியுரிமையைத் துறந்து வெளிநாடுகளில் குடியேறிய இந்தியர்களின் எண்ணிக்கைகள் குறித்து, காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த, மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கிர்த்தி வர்தன் சிங், கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் சுமார் 2 லட்சம் இந்தியர்கள் தங்களது குடியுரிமையைத் துறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

“அமைச்சகம் வழங்கியுள்ள தரவுகளின்படி, இந்தியக் குடியுரிமையைத் துறந்த இந்தியர்களின் எண்ணிக்கை, கடந்த 2020 ஆம் ஆண்டில் 85,256; 2021-ல் 1,63,370; 2022-ல் 2,25,620; 2023-ல் 2,16,219 மற்றும் 2024-ல் 2,06,378” எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் குடியேறிய இந்தியர்கள் தங்களது குடியுரிமையைத் துறந்ததற்கான காரணம் அவர்களுக்கு மட்டுமே தெரியும் என மத்திய அரசு கூறியுள்ளது.

இதையும் படிக்க: காலிஸ்தான் குடியரசு? கனடாவில் திறக்கப்பட்ட தூதரகத்தால் பரபரப்பு!

The central government informed the Lok Sabha that around 2 lakh Indians renounced their Indian citizenship in 2024.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest