
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘கூலி’ திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது.

ஆமீர் கான், நாகர்ஜூனா, செளபின் சாஹிர் என படத்தின் முக்கிய நடிகர்கள் அனைவரும் இந்த நிகழ்வுக்கு வந்திருக்கிறார்கள்.
அனிருத் இசையில் உருவாகியிருக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் அத்தனை பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது.
ரஜினிகாந்த் சார் மட்டுமேதான் காரணம்
படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஆமீர் கான் பேசுகையில், ” நான் இந்தப் படத்தில் நடிப்பதற்கு ரஜினிகாந்த் சார் மட்டுமேதான் காரணம்.
அவருடைய புன்னகை, கண்கள், அவரின் எனர்ஜி ஆகியவை எனக்கு பிடிக்கும். நான் கதையைக் கூட கேட்கவில்லை. பணம் கேட்கவில்லை.
தேதி விவரங்கள் பற்றிகூட கேட்கவில்லை. எப்போது படப்பிடிப்பு என்று மட்டும்தான் கேட்டேன்.” எனப் பேசினார்.

நடிகர் சத்யராஜ் பேசுகையில், “ஒருவர் நடக்கும்போது, பேசும்போது அல்லது தோற்றத்தால் ஸ்டைலிஷாக இருக்கலாம்.
ஆனால் ரஜினி சார் தூங்கும்போது கூட ஸ்டைலிஷாக இருக்கிறார். ஒருவர் தூங்கும்போது எப்படி இவ்வளவு ஸ்டைலிஷாக இருக்க முடியும்?
நான் முன்பு ரஜினியுடன் 7 படங்களில் நடித்திருக்கிறேன். அவை அனைத்தும் அவருக்கு எதிரான வில்லன் கதாபாத்திரங்கள்.
நான் அவரது நண்பனாக நடிக்கிறேன். இவ்வளவு அற்புதமான திறமையான நட்சத்திரத்தை நாம் பெற்றிருப்பது பாக்கியம்.” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…