Screenshot-2025-08-03-180452

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சிவகுமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, வெற்றிமாறன், கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன், நடிகர் மற்றும் எம்.பி கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஒளிபரப்பப்பட்ட காணொளியில், “அகரம் பவுண்டேஷன் மூலம் 6,378 மாணவர்கள் கல்வி பெற்றிருப்பதாகவும், அவர்களில் 4,800 மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டியிருந்தது.

Agaram விதை 15-ம் ஆண்டு விழா
Agaram விதை 15-ம் ஆண்டு விழா

அந்தக் காணொளியைத் தொடர்ந்து, அகரம் பவுண்டேஷனால் கல்விபெற்ற மாணவர்கள் மேடையில், “கல்வி பெற்று, வேலை பெற்று குறைந்தபட்சம் ஒருவரையாவது படிக்க வைப்போம்” என்று உறுதிமொழி ஏற்றனர்.

ட்ரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. இதில், பறை உள்ளிட்ட தாள கருவிகள் இசைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, அகரம் பவுண்டேஷன் மாணவர்களுக்கு உதவிய கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

பின்னர் மேடையில் பேசிய கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன், “இந்த உலகத்துல சவாலான விஷயம் நல்லது செய்றது. தெருவில் இறங்கி நல்லது செய்யணும்னு நீங்க நினைச்சாதான் அது எவ்வளவு பெரிய சவாலானது என்று உங்களுக்கு தெரியும்.

முதலில் நல்ல விஷயங்கள் செய்வதற்கு ஒரு துணிவு வேண்டும். துணிச்சல் இல்லாதவர்கள் யாரும் நல்ல விஷயம் செய்ய முடியாது.

நல்ல விஷயம் செய்வதற்கு பணமோ செல்வமோ உலகத்துல சவாலான விஷயம் நல்லது செய்றது முக்கியமல்ல, துணிவு தான் முக்கியம்.

கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன்
கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன்

அந்தத் துணிவோடு இவ்வளவு நல்ல காரியங்கள் செய்து கொண்டிருக்கின்ற அகரத்திற்கு எனது வாழ்த்துகள்.

நல்ல விஷயம் செய்யும்போதுதான் நீங்கள் எதிர்க்கப்படுவீர்கள், களங்கப்படுத்தப்படுவீர்கள். என்ன செய்தாலும் எனது நல்ல காரியங்கள் களங்காது என்பதை நிரூபிக்கின்ற துணிவுதான் ரொம்ப முக்கியம்.

இயற்கையில் எத்தனை லட்சம் வருஷங்கள் ஆனாலும் கெட்டுப் போகாத பொருள் இருக்கிறது என்றால் அது தேன்.

அந்த இயற்கைக்கு சவால் விடுகின்ற ஒன்றை மனிதன் கண்டுபிடித்து இருக்கிறான் என்றால் அது கல்வி.

எத்தனை வருஷம் ஆனாலும் கெட்டுப் போகாதது தேனும், கல்வியும்.

கல்விக்கு உதவிய எவ்வளவோ பேரை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், யாருக்கு உதவ வேண்டும் என்று அந்த தேர்வு முறை இருக்கிறது. அதுதான் அகரத்தின் தனித்தவம்.

சூர்யா
சூர்யா

நாம் எந்த தரப்புக்கு பேச வேண்டும் என்பதில் ஒரு எழுத்தாளனாக, ஒரு செயல்பாட்டாளனாக, ஒரு கலைஞனாகத் தெளிவு வேண்டும்.

அந்த தெளிவோடு நடந்து கொண்டிருக்கின்ற திரைக்கலைஞர் சூர்யாவிற்கும், அகரத்தின் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.

கொடுப்பதற்கு எவ்வளவு இருக்கிறது என்று மனித சமூகத்திற்கு நிரூபித்துக் கொண்டே வேண்டியிருக்கிறது.

கல்வியைக் கொடுக்கின்ற இந்த செயலுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள்.” என்று கூறினார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest