Screenshot-2025-08-03-165137

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சிவக்குமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, வெற்றிமாறன், இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல், கம்யூனிஸ்ட் எம்.பி சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஒளிபரப்பப்பட்ட காணொளியில், “அகரம் பவுண்டேஷன் மூலம் 6,378 மாணவர்கள் கல்வி பெற்றிருப்பதாகவும், அவர்களில் 4,800 மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டியிருந்தது.

சூர்யா
சூர்யா

அந்தக் காணொளியைத் தொடர்ந்து, அகரம் பவுண்டேஷனால் கல்விபெற்ற மாணவர்கள் மேடையில், “கல்வி பெற்று, வேலை பெற்று குறைந்தபட்சம் ஒருவரையாவது படிக்க வைப்போம்” என்று உறுதிமொழி ஏற்றனர்.

ட்ரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. இதில், பறை உள்ளிட்ட தாள கருவிகள் இசைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, அகரம் பவுண்டேஷன் மாணவர்களுக்கு உதவிய கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

பின்னர் மேடையில் பேசிய இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல், “இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு நன்றி. அகரம் நிறுவனர் சூர்யா செய்து கொண்டிருப்பது சிறந்த மனிதாபிமான சேவை.

99 சதவிகிதம் பேர் தனக்காக மற்றும் தனது குடும்பத்துக்காகவும் மட்டும் செய்து கொண்டிருக்கும்போது, நீங்கள் சமுதாயத்துக்காக இந்த முயற்சியை செய்திருப்பது மிகப்பெரிய சேவை. இது மிகப்பெரிய வேலை.

இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல்
இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல்

ஒவ்வொருவரும் உங்களின் கரியரில் மிகப்பெரிய உயரத்திற்கு செல்லும் காலம் வரும்.

ஆனால், அதை இந்த சமூகத்திற்கும், அகரம் பவுண்டேஷனுக்கும் திருப்பிக் கொடுக்க மறக்காதீர்கள்.” என்று கூறினார்.

அவர் பேசியதை தொடர்ந்து அவரின் கரங்களால் சாய்ராம் கல்லூரி நிறுவனம் அகரம் பவுண்டேஷனுக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கியது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest