hero

தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் நடத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டைக் கடந்த ஆகஸ்ட் 21- ஆம் தேதி நடந்தது.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

மேலும் தேர்தலை முன்னிட்டு செப்டம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து தேர்தல் பரப்புரையை மேற்கொள்ள இருக்கிறார் விஜய்.

இந்நிலையில், காரைக்குடியில் நடந்த மத நல்லிணக்க விழாவில் நேற்று (ஆகஸ்ட் 31) கலந்து கொண்ட இயக்குநர் அமீரிடம் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், “நம் நாட்டில் ஒருவருக்கு வாக்களிக்க எந்த அளவுக்கு உரிமை இருக்கிறதோ அந்த அளவுக்கு கட்சி துவங்கவும் உரிமை இருக்கிறது.

விஜய் கட்சி துவங்கியபோது அதை ஆதரித்தவன் நான். தமிழரான உச்ச நடிகர் புது கட்சி துவங்கியதைப் பார்த்து சந்தோசப்பட்டேன்.

ஆனால் ஒருவரைத் தரக்குறைவாக எப்பொழுதுமே விமர்சிக்கக் கூடாது.

இயக்குநர் அமீர்
இயக்குநர் அமீர்

விஜய் நடத்தியது மாநாடு மாதிரி இல்லை ரசிகர்களின் சந்திப்பு போன்றே இருந்தது.

கட்சி துவங்கியவர்கள் எல்லாம் அரசியலில் நிலைத்து நின்றுவிட முடியாது.

மக்களுக்கான கொள்கைகளை முன் வைப்பவர்கள் மட்டும் தான் நிலைத்து நிற்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest