G0pykyaaAAAmLId

மலையாள திரையுலகில் பல திரைப்படங்களில் பிஸியாகியிருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், தற்போது மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரமுடன் ‘பைசன்’ படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. இப்படத்தின் ‘தீக்கொளுத்தி’, வேடன், அறிவு குரலில் ‘றெக்க றெக்க’ என இரண்டு பாடல்கள் வெளியாகியிருக்கிறது.

'பைசன்'
‘பைசன்’

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் தனது நண்பர் ஒருவரின் இறப்பு குறித்து உருக்கமாகப் பேசியிருக்கிறார் நடிகை அனுபமா. அதில், “நான் என் நீண்ட நாள் நண்பருடன் சண்டைபோட்டுவிட்டு பல ஆண்டுகளாக பேசாமல் இருந்தேன்.

ரொம்ப நாளுக்குப் பிறகு சமீபத்தில் அவரிடமிருந்து மெசேஜ் வந்தது. ஆனால், நான் என்ன பேசுவது என்று தெரியாமல் அந்த மெசேஜுக்கு பதிலளிக்காமல் விட்டுவிட்டேன்.

அனுபமா பரமேஸ்வரன்
அனுபமா பரமேஸ்வரன்

ஆனால், இரண்டு நாளுக்குப் பிறகு அவர் இறந்த செய்தி வந்தது. அவர் இறக்கும் முன் சண்டை போட்ட என்னிடம் பேசுவதற்கு முயற்சித்திருக்கிறார். ஆனால் நான் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். அது என் வாழ்நாளில் என்றும் என் மனதில் ஆறாத காயமாக இருக்கும். என்ன சண்டைபோட்டாலும் நல்ல நண்பர்களை இழந்துவிடக் கூடாது என்று அன்றுதான் உணர்ந்தேன்” என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest