WhatsApp-Image-2025-09-20-at-9.47.12-AM

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 9-ம் தேதி உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டன.

ஆனால், வழக்கம் போல தொழில்நுட்ப அளவில் முந்தைய சீரிஸ்களுக்கும் இந்த சீரிஸுக்கும் பெரிய வேறுபாடேதும் இல்லாத வகையில்தான் அறிமுகப்படுத்தப்பட்டன.

ப்ளஸ் மாடல் நீக்கப்பட்டு, 5.6 மி.மீ. தடிமனில் ஐபோன் 17 Air அறிமுகப்படுத்தப்பட்டது.

ஐபோன் 17 சீரிஸ் (சித்தரிப்புப் படம்)
ஐபோன் 17 சீரிஸ் (சித்தரிப்புப் படம்)

அடுத்து, ஐபோன் 17 ப்ரோ & ப்ரோ மேக்ஸ் மாடல்களில் பின்புற கேமரா வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

செப்டம்பர் 12-ம் தேதி இந்த புதிய சீரிஸ் ஐபோன்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில், அவற்றின் விற்பனையும் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டிம் குக், இந்த சீரிஸின் ஹை-எண்ட் மாடலான ஐபோன் 17 ப்ரோ மேக்ஸில் எடுக்கப்பட்ட முதல் புகைப்படங்கள் என 3 புகைப்படங்களை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், அந்தப் புகைப்படங்களை எடுத்த இனெஸ் மற்றும் வினூத், மிக்கலீன் தாமஸ் மற்றும் ட்ரங்க் சூ ஆகியோருக்கு டிம் குக் தனது ட்வீட்டில் நன்றி தெரிவித்துள்ளார்.

புதிய ஐபோன் 17 சீரிஸ் மாடல்கள் குறித்து உங்களின் கருத்துகளை கருத்துப் பகுதியில் பதிவிடவும்.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest