பிரபல நடிகையான அருணா வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையை  நடத்தி வருகின்றனர். 

பாரதிராஜா இயக்கிய ‛கல்லுக்குள் ஈரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அருணா.

தொடர்ந்து ‛சிவப்பு மல்லி’, ‘நீதி பிழைத்தது’, ‘நாடோடி ராஜா’, ‘முதல் மரியாதை’, ‘கரிமேடு கருவாயன்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை அருணா -  மோகன் குப்தா
நடிகை அருணா – மோகன் குப்தா

மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் கேசினோ ட்ரை பகுதியில்தொழிலதிபர் மன்மோகன் குப்தா,நடிகை அருணா தம்பதியினர் வசித்து வருகின்றனர், மன்மோகன் குப்தா பிரபல (ஆர்க்கிடெக்சர்) வீடு, பங்களாக்களில் உள்கட்டமைப்பு அலங்கார பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மோகன் நடத்தி வரும் நிறுவனத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கிடைத்த புகாரின்  அடிப்படையில் அமாலக்கத்துறையினர் இவரது வீடு, அலுவலங்களில் காலை முதல் தோனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

நடிகை அருணா
நடிகை அருணா

நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள அவரது வீடு சொகுசு பங்களா உள்ளது. இங்கு மூன்று கார்களில் வந்துள்ள பத்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மன்மோகன் குப்தா நடத்தி வரும் நிறுவனத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கிடைத்த சில ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழுமையான சோதனைக்குப் பிறகு தொழிலதிபர் மன்மோகன் குப்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா, முக்கிய ஆவணங்கள் ஏதாவது சிக்கி உள்ளதா, பணம் ஏதாவது கைப்பற்றப்பட்டுள்ளதா, புகாரில் முகாந்திரம் இருக்கிறதா, அல்லது வேறு என்ன விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்துகிறார் என்பது குறித்து தெரியவரும் எனவும் அமலாக்கதுறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

மேலும் இந்த சோதனையில் இவர்கள் இல்லத்தில் ஏதாவது ஆவணங்கள் சிக்கினால் அதன் அடிப்படையில் இவர்களுக்கு சொந்தமாக வேறு ஏதாவது அலுவலகங்கள் வீடுகள் இருந்தால் அங்கியும் சோதனைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது தற்போது சென்னையில் இந்த ஒரு இடத்தில் மட்டுமே அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest