Kuldeep-Yadav

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. துபாயில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்து வீச்சை தேர்வு செய்து ஆட்டத்தை தொடங்கினார்.

அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி, இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறத் தொடங்கியது.

13.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஐக்கிய அரபு அமீரக அணி, 57 ரன்னில் ஆட்டத்தை முடித்துக்கொண்டது. 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

குல்தீப் யாதவ்
குல்தீப் யாதவ்

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், ஆசிய கோப்பை போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராகத் தனது சிறப்பான ஆட்டத்தால் மிரட்டியிருக்கிறார்.

குல்தீப் யாதவ்-ன் ஆட்டம்:

ஐக்கிய அரபு அமீரக அணி 47/2 என்ற நிலையில் இருந்தபோது, குல்தீப் யாதவ் பந்துவீச வந்தார். தனது இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே, ராகுல் சோப்ராவை வீழ்த்தினார். அடுத்தடுத்து முகமது வசீம், ஹர்சித் கௌசிக் என மொத்தமாக 2.1 ஓவர்களில் 7 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய குல்தீப் யாதவ், “பேட்ஸ்மேனின் மனதைப் படிப்பதும், அவர்கள் அடுத்து என்ன செய்ய முயற்சிப்பார்கள் என்பதைப் புரிந்துகொள்வதும் பந்துவீச்சில் மிக முக்கியம்.

தோல்வி பயத்தை விடுத்து, பேட்ஸ்மேன்களைப் படிப்பதில் கவனம் செலுத்துவது மன அழுத்தத்தைக் குறைக்கிறது,” எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி

குல்தீப்பின் இந்த மாற்றம் அவரை ஒரு அபாயகரமான பந்து வீச்சாளராக மாற்றியுள்ளது.

இந்த ஆட்டம், அவர் இந்திய அணியின் முக்கிய வீரராகத் திகழ்வார் என்பதற்கான அத்தியாயமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest