
விஜய் டிவி-யில் கடந்த 2020-ம் ஆண்டு முதல், 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர், நேற்றுடன் நிறைவடைந்தது. கிட்டத்தட்ட 6 ஆண்டு பயணம் நிறைவடைவதால், இத்தொடரில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களும், இந்தத் தொடரில் நடிக்கும்போது கிடைத்த அனுபவங்களையும், சக நடிகர்களுடான நட்பினையும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பாக்கியலட்சுமி தொடரில் எழில் பாத்திரத்தில் சில ஆண்டுகள் நடித்து, பின்னர் இந்தத் தொடரிலிருந்து விலகியவர் நடிகர் விஷால்.




அவர் குறித்து இனியா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை நேஹா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் பதிவில், “நான் முன்பே சொல்லியிருக்கிறேன், இப்போதும் சொல்கிறேன், இன்னும் ஆயிரம் முறை சொல்வேன்! பாக்யலக்ஷ்மி படப்பிடிப்பில் இந்த 6 வருடங்களில், என் வாழ்க்கையின் மிக முக்கியமானவராக மாறிய ஒருவரை நான் சந்தித்தேன்!! அவர் என் மோசமான நிலையைப் பார்த்திருக்கிறார். என் கஷ்டங்களின் மத்தியிலும் என்னுடன் நின்றிருக்கிறார். ஒரு முறை கூட விட்டுக்கொடுத்ததில்லை.
அவர் என் பயணத்தைக் கண்டது மட்டுமல்லாமல், அதற்கு முழு மனதுடன் இடம் கொடுத்தார்! எனக்குப் பிடித்த மனிதர். எப்போதும் அப்படித்தான் இருப்பார்! அவர்தான் என் இனியாவுக்கான எழில்!! என் லட்டுக்கோவுக்கு விஷாலு!
அவர் சீரியலிலிருந்து கொஞ்சம் முன்னதாகவே சென்றதால், இறுதி அத்தியாயத்தை முடித்தபோது எங்களுடன் இருக்க முடியவில்லை. சில உறவுகள் திரையைத் தாண்டி, ஸ்கிரிப்டுகளைத் தாண்டி, காலத்திற்கு அப்பாற்பட்டவை! அதில் இதுவும் அவற்றில் ஒன்று!




இந்தப் பிணைப்பு எப்போதும் என்னுடையதாக இருக்கும். நாம் உருவாக்கிய நினைவுகள் என் இதயத்தில் என்றென்றும் வாழும்! வரும் ஆண்டுகளில் உங்களுக்கு நல்லதே நடக்கும் என வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியானவராகவே இருங்கள்! உங்களால் முடிந்தவரை மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.” என வாழ்த்தியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…