VS-YouTube-BiggBossTamilSeason917thDecember2025-Promo2-0E2809908E2809D

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர்.

இந்த வாரத்திற்கான வீட்டு தலையாக வினோத் இருக்கிறார்.

நாமினேஷனில் சாண்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்வதி, அமித், சுபிக்ஷா, திவ்யா கணேஷ், சபரி, அரோரா, ஆதிரை ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.

BB Tamil 9
BB Tamil 9

பிரஜின் வெளியே சென்றதில் இருந்து சாண்ட்ரா எதோ ஒரு காரணங்களை சொல்லி அழுதுகொண்டே இருக்கிறார். இன்று வெளியான முதல் புரொமோவில் வினோத்துக்கும் சாண்ட்ராவுக்கும் வாக்குவாதம் நடக்கிறது. “இந்த மாதிரி வினோத் அப்போ என்கிட்ட பேசல. என் குழந்தைங்க மேல சத்தியமா சொல்றேன்” என அமித்திடம் சொல்லி சாண்ட்ரா அழுகிறார்.

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் புரொமோவில் ஹவுஸ் மேட்ஸ் சாண்ட்ரா குறித்து பேசிக்கொண்டிருக்கின்றனர்.

“இந்த வீட்டுக்கு வரதுக்கு முன்னாடியே ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர் முதல்ல வெளிய போவாங்கன்னு அவங்களுக்கு தெரியாதா?” என FJ-வும்,

“சுத்த விடுறாங்க, எதாச்சு சொன்ன நம்மகிட்டையே திரும்பிடுவாங்கன்னு தான் நான் எதுவும் சொல்றது இல்ல” என கம்ருதீனும் சாண்ட்ரா குறித்து சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

BB Tamil 9
BB Tamil 9

“நம்ம எதாச்சு பேசுனாலும் நம்மகிட்டையே சண்டைக்கு வராங்க. ஒரு பிரச்னைய பத்தி மட்டும் பேச மாட்டிங்குறாங்க” என வினோத்தும் சாண்ட்ரா பற்றி ஹவுஸ் மேட்ஸிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest