
தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 9 தொடங்க இருக்கிறது.
விஜய் டிவி யின் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று பிகபாஸ்.
2017ம் ஆண்டு தொடங்கி கடந்தாண்டு வரை மொத்தம் எட்டு சீசன்கள் ஒளிபரப்பாகி இருக்கின்றன.

முதல் சீசனில் இருந்து 7வது சீசன் வரை நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார்.
கடந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்தார்.
சில கமிட்மெண்டுகளால் தற்காலிகமாக நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல் ஹாசன் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
இந்நிலையில் இந்த வருடம் அதாவது ஒன்பதாவது சீசன் குறித்த அப்டேட் சில தினங்களுக்கு முன் வெளி வந்தது.
முன்னதாக இந்தச் சீசனை விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குவாரா அல்லது கமல் ஹாசன் மீண்டும் வருவாரா என்கிற ஒரு எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களிடம் இருந்தது.
அதைத் தெளிவுபடுத்தும் விதமாக விஜய் சேதுபதிதான் இந்தச் சீசனுக்கும் ஆங்கர் என முன் கூட்டியே சேனலே அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டது.
நிகழ்ச்சியின் டீஸர் வெளியாகி விட்டதால் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார், யார் எனச் சமூக வலைத்தளங்கள் சல்லடை போட்டு தேட ஆரம்பித்து விட்டனர். இவர், அவர் எனத் தினமொரு பட்டியல் அங்கே வெளியாகியபடி இருக்கின்றன.

அதேநேரம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகத் தொடங்கும் நாள் குறித்து உறுதியான தகவல் எதுவும் தெரியாமல் இருந்தது.
இந்தச் சுழலில் வரும் சீசன் தொடங்குவது குறித்த உறுதியான தகவல் நமக்குக் கிடைத்தது.
அதன்படி அக்டோபர் 3 ம் தேதி விஜய் சேதுபதி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று சுற்றிக் காட்டும் வாக் இன் நிகழ்வு நடக்கவிருக்கிறது.
அதற்கு அடுத்த நாள் சீசன் 9ன் முதல் எபிசோடின் ஷுட்டிங் நடைபெறுகிறது.
மறு நாள் அதாவது அக்டோபர் 5 ம் தேதி முதல் எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறதாம்.
ஆக. அன்று முதல் அடுத்த நூறு நாட்கள் பிக்பாஸ் கொண்டாட்டம்தான்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…