பிக்பாஸ் பிரபலம் ராஜு ஜெயமோகன் நடிப்பில் உருவாகியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படம் வரும் ஜூலை 18ம் தேதி வெளியாகவிருக்கிறது.
பிக்பாஸ் தான் காரணம்!
இந்த திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய ராஜு, “பாக்கிய ராஜ் சாருக்கும், நெல்சன் ..திலீப் குமார் சாருக்கும் நன்றி. எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியும், அதில் என்னை ஜெயிக்க வைத்த மக்களும் தான் காரணம்.
படத்தில் மட்டும்தான் நடிப்பேன், இதுமாதிரி மேடைகளிலும் பிரஸ் மீட்களிலும் நடிக்க மாட்டேன் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

எங்க தயாரிப்பாளர் அண்டர்டேக்கரும் ரோமன் ரிங்சும் கலந்த மாதிரி இருப்பார்!
“இந்த படம் நல்லா வந்ததுக்கு இதில் வேலைப்பார்த்த அசிஸ்டன்ட் டைரக்டர்கள்தான் காரணம். நானும் ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் என்பதால் அவர்களை கௌரவிக்க நினைக்கிறேன்.
ஜியோ ஹாட்ஸ்டாரில் நானே எழுதி இயக்கி நடிக்கும் படத்தில் கமிட் ஆகியிருந்தேன். அது தாமதமான நேரத்தில் இந்த படத்தை பண்ணினோம். இதற்கு அனுமதித்த ஜியோ ஹாட்ஸ்டாருக்கு நன்றி.
நிவாஸ் புரோ (இசையமைப்பாளர்) பண்ணின பாடல்கள் பற்றி எல்லோருக்குமே தெரியும். ஆனால் அவர் செய்ததிலேயே சிறந்த ஆர்.ஆர் வேலை இதுதான்.
டைரக்டர் ராகவ் மிர்தாத். மிர்தாத் என்பது ஒரு தத்துவவியலாளரின் பெயர். ஜென் ஜி மக்களுக்கு ஒரு ஆழமான விஷயத்தை எப்படி சொல்வது என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது. இந்த வாய்ப்புக்காக அவருக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

எல்லோரும் தயாரிப்பாளர் கிட்ட கதை சொல்ல ரொம்ப கஷ்டப்படுவாங்க. ஆனால் இது தயாரிப்பாளருடைய கதைங்கிறதால ஈசியா ஓகே ஆகிடுச்சு. தயாரிப்பாளர் சுரேஷ் சுப்பிரமணியன் பார்க்க அண்டர்டேக்கரும் ரோமன் ரிங்சும் கலந்த மாதிரி இருப்பார். இப்ப அமெரிக்காவில் இருக்கிறார். அங்க எல்லாருக்கும் ஃப்ரீயா படம் போட்டு காட்டிட்டு ஜாலியா இருக்கார்.
என்னை வைச்சு படம் எடுத்த தயாரிப்பாளர் பணத்தை திருப்பி எடுத்து கொடுத்திட்டாதான் என்னை ஹீரோன்னு ஒத்துக்குவேன்.
இது 3 ஹீரோ சப்ஜக்ட்!
“இந்த படத்தில் வேலை செய்த எல்லோருக்குப் பின்னாடியும் நிறைய வலி இருக்கு. எல்லாரையும் இந்த படம் காப்பாத்தணும், இனியும் கஷ்டப்பட முடியாது காண்டா இருக்கு.
உங்க கண்ணை கெடுக்காத கூல் டெம்ப்ரேச்சரில் படம் எடுத்திருக்கிறார் எங்கள் ஒளிப்பதிவாளர். தேவையில்லாத விஷயங்களை கட் பண்ணி, உங்க டைமை வேஸ்ட் பண்ணாத படமா மாத்தியிருக்கார் எங்க எடிட்டர்.
நான் அம்மா சொல்லி திருந்தின பையன் இல்லை, சினிமா பாத்து திருந்தினவன். நிறைய சமூக உணர்வுகள், என்னென்ன செய்யக் கூடாது என்பதை சினிமா பாத்துதான் தெரிஞ்சுகிட்டேன். அப்படி ஒரு மெசேஜை சுகர்கோட் செய்து கொடுத்திருக்கிறார் எங்க டைரக்டர். கண்டிப்பா உங்க காசு வேஸ்ட் ஆகாது.
இதுல நான் மட்டும் ஹீரோ இல்லை. நான், வி.ஜே. பப்பு, மைக்கேல் என மூன்று ஹீரோ சப்ஜக்ட் இது.
இந்த படத்துல ஒரு குட்டி நயன்தாரா, அதிதி ராவ் இருக்காங்க. நீங்க ரெண்டு பேரும் இந்த படத்தில இருந்து பெரிய இதைவிட பெரிய இடத்துக்குப் போகணும்னு நான் விரும்புறேன்.
சார்லி சார், சரண்யா மேடம், தேவதர்ஷிணி மேடம்தான் இந்த படத்துடைய முகங்கள். அவர்களாலதான் இதை எடுக்க முடிந்தது.
விஜய் அண்ணாவுக்கு கடமைபட்டிருக்கிறேன்
“இன்னைக்கு இன்டெர்நெட்டில் எதை சரியானது, எதை தப்பா எடுத்துப்பாங்கன்னு தெரியல, எந்த படம் ஓடும், எந்த படம் ஓடாது என்பது தெரியல, நாம பேசுவதில் எது பெரிசா பேசப்படும்னு தெரியல. வித்தியாசமான உலகத்தில இருக்கிற மாதிரி இருக்கு.

பன் பட்டர் ஜாம் எப்படி நமக்கு எல்லா ஊர்லயும் கிடைக்குமோ, நம்ம வயிறைக் கெடுக்காதோ அப்படி ஒரு நீட்டான படமா இது இருக்கும்னு நினைக்கிறேன். இது ரொம்ப சிம்பிளான படம்.
தளபதி விஜய் அண்ணா ஒரே போன்காலில் மொத்த தமிழ்நாட்டையும் எங்க படத்தை திரும்பிப்பார்க்க வைத்தார். அவர் என்னை எப்படிப் பார்க்கிறார், அவருக்கு என்னைப் பிடிக்குமா, எதுக்காக எனக்கு விஷ் செய்கிறார் என்பது பிரமிப்பா இருக்கு. நீங்கள் இல்லைன்னா என்ன பண்ணியிருப்போம் தெரியலண்ணா… உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.. லவ் யூ” எனப் பேசியுள்ளார்.