
மறைந்த நடிகர் விஜயகாந்தின் 100-வது படம் ‘கேப்டன் பிரபாகரன்’ ஆகஸ்ட் 22-ம் தேதி ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.
அதையொட்டி, இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை கமலா திரையரங்கில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் மற்றும் நடிகர் சிங்கம் புலி, விஜய்காந்த் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
“கேப்டன் இருந்ததால் தான், நான் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்தேன். கேப்டன் ஆபீஸில் சாப்பிட்டதால் தான் நான் அசிஸ்டன்ட் டைரக்டராக தொடர்ந்தேன்.
என்னுடைய சொந்தகாரர்கள், ‘உனக்கு சோறு போட ஒரு ஆள் இருக்காரு. அதனால, இனிமேல் நீ சென்னையவிட்டு வரமாட்ட. நீ அங்க சாப்பிட்டு நல்லா இருக்க’ என்று சொல்லி சென்றார்கள்.

மதுரைக்காரனாலே இப்படி தான்
ஒருமுறை விஜயகாந்த் சாருடன் ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று பிரசாத் ஸ்டூடியோ வரை வரிசை நின்றிந்தது. அந்த வரிசையை நான் தான் ஒழுங்குப்படுத்தினேன்.
அப்போது என்னைப் பற்றி விசாரித்து, ‘வா… நீ போட்டோ எடுக்கலயா?’ என்று கேட்டார். ‘நான் உங்களை வெச்சு ஒரு படம் எடுக்கணும்’ என்று சொன்னேன். ‘நினைச்சேன்டா… மதுரைக்காரனாலே இப்படி தான்’ என்று போய்விட்டார்.
அடுத்து அஜித் வைத்து படம் எடுக்கிறேன். உளவுத்துறை ரிலீஸாகிறது.
விஜயகாந்த் சாரை வெச்சு எதாவது படம் எடுக்கணுமே என்று யோசித்துகொண்டே இருந்தேன்.
சூர்யா படத்துல யாராவது ஒரு நாள் கெஸ்ட் ரோல் பண்ணனும்னு பேசிகிட்டு இருக்காங்க. அப்போ நான் விஜயகாந்த் சாரை சொன்னேன்.
அவர் எப்படி ஒரு நாள் வருவார் என்று கேட்டார்கள். நான், ‘பேசிப்பார்ப்போம்’ என்று கூறினேன்.

அவர்கள் பேசி ஓகே ஆனதும், நான் அவர் வீட்டுக்கு சென்றேன்.
அப்போது அவர், ‘ஒரு 10 நிமிஷம் கழிச்சு வா… ஒரு நாள் ஷூட்டுக்காக ஒரு டைரக்டர் கதை சொல்ல வராரு’ என்றார். அது நான் தான் என்றேன்.
உடனே அவர் ஒரு நாளுக்கு நடிக்க மாட்டேன் என்றார். நான் அவரிடம், ‘நீங்கள் நடிக்கவில்லை என்றால், எப்படி படம்?’ என்று கேட்டேன். அவர் 10 நாள் கழிச்சு தேதி கொடுத்தார்.
தேவையில்லாம ஏன் காசு செலவு பண்றீங்க!
ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல நடிச்சுகிட்டு இருந்தாரு. நான் யூனிட்டேயே கூட்டி சென்றிருந்தேன்.
‘உன்ன யாரு யூனிட்ட கூட்டிட்டு வர சொன்னது?’ என்று கேட்டார். ‘படம் எடுக்கணும்லணே’ என்று கூறினேன்.
‘தேவையில்லாம ஏன் காசு செலவு பண்றீங்க? இங்கேயே ஆளுங்க இருக்காங்கள்ல… நீ, சூர்யா, ரத்னவேல் மட்டும் வாங்க’ என்று சொன்னார்.
அவருடைய ஷூட்டிங்கை மூன்று மணிநேரம் நிறுத்திவிட்டார். ஒரு மணிநேரம் கேப்டன் ஷூட்டிங் எவ்வளவு ஆகும் என்று யோசித்து பாருங்கள்.
நானும், சூர்யாவும் அவருக்கு மாலை போட்டோம். ‘எதுக்கு இதெல்லாம்… தேவையில்லாத செலவு?’ என்று கேட்டார். அவ்வளவு நல்ல மனிதன் அவர்.

விஜயபிரபாகரன் தம்பி சண்முகபண்டியன் படத்தில் நடிக்க, நான் காசு கேட்டதாக ஒரு புரளி கிளம்பிவிட்டது.
நான் அவரிடம் அதுபற்றி, ‘இல்லை’ என்று விளக்கியதும், மலேசியா வர சொன்னார்.
அங்கே நான் நான்கு நாள் ஷூட்டிங்கிற்காக 16 நாள் அவருடனே இருந்தேன்.
மக்களுக்கு அண்ணனைப் பற்றி தெரியாமல் போய்விட்டது.
அவரைத் தோல்விகள் வீழ்த்தவில்லை. துரோகம் தான் வீழ்த்தியது.
அவர் விட்டதை விஜயபிரபாகரன் கொண்டு வருவார். எங்கள் அண்ணி பிரேமலதா கொண்டுவருவார்.
விருதுநகர் உங்களை கைவிட்டதுப்போல, எதுவுமே உங்களைக் கைவிடாது”. என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…