hero-imag-77

அமெரிக்காவைச் சேர்ந்த 56 வயதான யூடியூபர் கோடி குரோன் ஏ.ஐ ஆல் உருவாக்கப்பட்ட உணவு திட்டத்தின் மூலம் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்ததாக கூறியிருக்கிறார்.

பசிபிக் நார்த்வெஸ்ட் பகுதியில் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசிக்கும் இவர் தனது உடல் எடை காரணமாக பல்வேறு இன்னல்களை சந்தித்த பிறகு அதனை குறைக்க முடிவு எடுத்துள்ளார். இதற்காக பயிற்சியாளர்கள் எதையும் நாடாமல் chatGpt உதவியை நாடி இருக்கிறார்.

ஏஐ கொடுத்த வழிகாட்டுதலின் பேரில் உணவு மற்றும் உடற்பயிற்சியை திட்டமிட்டுள்ளார் குரோன். இதனை தொடர்ச்சியாக செயல்படுத்திய குரோன் 95 கிலோவிலிருந்து 83 கிலோவாக குறைந்து இருக்கிறார்.

ஏஐ அவருக்கு வெறும் உணவு திட்டம் மட்டும் கொடுக்கவில்லை மாறாக உடற்பயிற்சி, அன்றாட வாழ்க்கை முறையை மாற்றியமைக்க வழிவகுத்து இருக்கிறது.

உடற்பயிற்சி முறை, தூக்கம் முறை, உணவு பழக்கவழக்கம் என எல்லாவற்றையும் மாற்றிக்கொண்ட குரோன், 46 நாட்களில் பதினோரு கிலோ எடை குறைந்து இருக்கிறார். இது தொடர்பாக அவரது youtube பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார்.

ஒவ்வொருவரின் உடல் எடைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. உடல் எடை அதிகமாக இருப்பது ஒரு பிரச்னையாக இருந்தால் அதற்கு மருத்துவரை அணுகி சரியான ஆலோசனை பெற்று, அதற்கான தீர்வுகளை காணலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest