
கடந்த 2019-ம் ஆண்டு மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஜல்லிக்கட்டு’ படம் இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. குறிப்பாக, ஒளிப்பதிவிற்காக பெரிதும் பாராட்டப்பட்டு சிறந்த ஒளிப்பதிவுக்காக ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரனுக்கு தேசிய விருதும் கிடைத்தது. சிறந்த ஒளிப்பதிவிற்காக இப்படத்திற்கு கேரள அரசின் விருதும் கிடைத்தது. மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட ‘அங்கமாலி டைரீஸ்’, விஜய் நடிப்பில் வெளியான ஏ.ஆர் முருகதாஸின் ’சர்கார்’ படங்களுக்கு கிரிஷ் கங்காதரன்தான் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ படத்திலும், அவரின் அடுத்து வெளியாகவிருக்கும் ‘கூலி’ படத்திலும் ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன்தான்.
இந்தப் படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன் எக்ஸ் பக்கத்தில் ஒளிப்பதிவாளர், “கிரிஷ் கங்காதரன்… மீண்டும் உங்களுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. நாம் இருவரும் இணைந்து படம்பிடித்த முதல் காட்சியிலிருந்து, நீங்கள் எனது பயணத்தை லென்ஸ் வழியாக படம்பிடித்தது மட்டுமல்லாமல், அதை உருவாக்குவதில் ஒரு பகுதியாகவும் இருந்தீர்கள். உங்கள் தொலைநோக்கு பார்வை, கடின உழைப்பு மற்றும் உறுதியான ஆதரவு கூலியில் பெரும் பங்காக இருக்கிறது. நீங்கள் உருவாக்கிய மாயாஜாலத்தை அனைவரும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்!” எனப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…