GxN5SZbEAA22I6

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கூலி’ திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி திரைக்கு வருகிறது. நாகார்ஜுனா, ஆமீர் கான், உபேந்திரா, சோபின், சத்யராஜ், சுருதி ஹாசன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ இப்போது ‘கூலி’ என அனிருத் – லோகேஷ் இருவரும் நான்காவது முறையாக இணைந்திருக்கின்றனர். இவையெல்லாம் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கின்றன.

அனிருத், லோகேஷ்.

படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கிவிட்டதால், பட புரோமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் லோகேஷ். நேர்காணல்கள், செய்தியாளர்கள் சந்திப்பு, தினமும் படம் குறித்த சமூக வலைதள பதிவுகள் என 360 டிகிரியில் புரோமோஷன் செய்துகொண்டிருக்கிறார்.

படத்தின் பின்னணி இசை உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் நிறைவுற்ற நிலையில் அனிருத்துடன் நான்காவது முறையாக இணைந்திருப்பது பற்றி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் லோகேஷ் கனகராஜ், “நாங்கள் இருவரும் எங்கள் பயணத்தை ஒன்றாகத் தொடங்கி, நான்காவது முறையாக மீண்டும் இணைந்திருக்கிறோம்.

ஒவ்வொரு முறையும் இருவரும் சேர்ந்து பணியாற்றியது அற்புதமான அனுபவமாக இருந்திருக்கிறது. இம்முறையும் எங்கள் இருவரின் கூட்டணியும் தெறிக்கவிடும். என் இன்னொரு தாயின் மகன், என் சகோதரன் அனிருத்திற்கு எனது மனநிறைந்த அன்புகள்.” என்று நெகிழ்ச்சியாக அன்பையும் நன்றியையும் தெரிவித்திருக்கிறார் லோகேஷ்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest